4,584 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி-சேலை
4,584 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி-சேலை
முத்தூர்,
முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் தொடக்க விழா தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று காலை நடைபெற்றது.
விழாவிற்கு முத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் மு.க.அப்பு தலைமை தாங்கி நகர, சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 584 ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
விழாவில் சங்க செயலாளர் எஸ்.ஜோதிலட்சுமி மற்றும் பேரூராட்சி தி.மு.க கவுன்சிலர்கள், ரேஷன் கார்டு பயனாளிகள், கூட்டுறவு சங்க அலுவலர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் நகர, கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.