விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

தலைஞாயிறு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-17 19:00 GMT
வாய்மேடு:-

தலைஞாயிறு அருகே உள்ள காடந்தேத்தி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த நாகூரான் மகன் தினேஷ்குமார் (வயது28). இவர் டிராக்டர் டிரைவர். இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மனவேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று பூச்சி மருந்து (விஷம்) குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தலைஞாயிறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்