தர்மபுரியில் பஸ்களில் 20 ஏர்ஹாரன்கள் பறிமுதல்

தர்மபுரியில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த 20 ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-03-17 16:22 GMT
தர்மபுரி:-
தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் ஏர்ஹாரன்களை பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாக புகார்கள் சென்றன. இதையடுத்து தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணிதரன், ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் தர்மபுரி புறநகர் பஸ் நிலையம் மற்றும் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீரென ஆய்வு நடத்தினார்கள். 
அப்போது தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த 20 ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் எல்.இ.டி. முகப்பு விளக்குடன் வந்த வாகனங்களில் இருந்து அந்த விளக்குகள் அகற்றப்பட்டன. விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட எந்தவித வாகனங்களிலும் பொருத்தக்கூடாது என்று அப்போது ஆய்வு நடத்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்