நாகையில், கவாத்து பயிற்சி நிறைவு விழா: நாடகம் நடித்து அசத்திய ஆயுதப்படை போலீசார்

நாகையில், கவாத்து பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் ஆயுதப்படை போலீசார் நாடகம் நடித்து அசத்தினர்.

Update: 2022-03-17 19:00 GMT
நாடகம் நடித்த ஆயுதப்படை போலீசார்.
நாகப்பட்டினம்:-

நாகையில், கவாத்து பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் ஆயுதப்படை போலீசார் நாடகம் நடித்து அசத்தினர். 

கவாத்து பயிற்சி

நாகை ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர் (நாகை), சுகுணாசிங் (மயிலாடுதுறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயுதப்படை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜன் வரவேற்றார். விழாவையொட்டி ஆயுதப்படையில் பயிற்சி பெற்ற போலீசாரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 
இதில் ஆயுதப்படை போலீசார், கொரோனா குறித்தும், ஹெல்மெட் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகங்களை நடத்தினர். 

முனிவர் வேடம்

நாடகங்களில் ஆயுதப்படை போலீசார் முனிவர் வேடம் அணிந்து நடித்து அசத்தினர். விழாவில் டி.ஐ.ஜி. கயல்விழி பேசியதாவது:-
ஒரு மாவட்டத்திற்கு பாதுகாப்பு அரணாக ஆயுதப்படை பிரிவு போலீசார் உள்ளனர். தஞ்சை சரகத்தில் பெண் போலீசாரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு தஞ்சை சரக காவல் துறை எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ், குற்றவியல் நீதித்துறை நீதிபதி கார்த்திகா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்