பிணமாக கிடந்த முதியவர்

மேலவாஞ்சூர் சோதனை சாவடி அருகே முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-17 19:00 GMT
நாகூர்:-

நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே சாலையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் அங்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்