ரங்காபுரம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.

Update: 2022-03-17 14:35 GMT
காவேரிப்பாக்கம்

தமிழக அரசு பொது சுகாதார நோய்த் தடுப்புத் துறை மூலம் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த ரங்காபுரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பாஸ்கரன் அனைத்து மாணவர்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயம்மாள் விஜயராகவன், ஆசிரியை ரேவதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்