காவேரிப்பாக்கத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

காவேரிப்பாக்கத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது

Update: 2022-03-17 14:26 GMT
காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின், பேரில் முதன்மை கல்வி அலுவலர் வழிக்காட்டுதலின் படி, பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் காவேரிப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்  நடைபெற்றது முகாமிற்கு பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். 
முகாமில் 97 மாற்றுதிறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் தேவைப்படுவோருக்கு அறுவை சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் கலந்து கொண்டு மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். 

உடல் இயக்க மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்