ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை

மாநில சிலம்பம் போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்

Update: 2022-03-17 13:18 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் 12-வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் விலங்கியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் பூமுத்தையா 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதலிடமும், வணிக நிர்வாகவியல் துறை 2-ம் ஆண்டு மாணவர் நவீன் 2-வது இடமும் பிடித்தனர்.
சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலாளர் ஜெயக்குமார், சிலம்பம் பயிற்சியாளர் ஸ்டீபன், ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார், விலங்கியல் துறை தலைவர் சுந்தரவடிவேல், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாயசித்ரா, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
---

மேலும் செய்திகள்