கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-17 13:15 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39). கூலித்தொழிலாளி. இந்தநிலையில் அந்தப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த மணிகண்டன், பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்ற கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததாக தெரிகிறது. மேலும் அருகில் சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்