நாமக்கல் பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் மீட்பு யார் அவர்? போலீசார் விசாரணை

நாமக்கல் பஸ் நிலையத்தில் முதியவர் பிணம் மீட்பு யார் அவர்? போலீசார் விசாரணை

Update: 2022-03-17 13:04 GMT
நாமக்கல்:
நாமக்கல் பஸ் நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இதன் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து பயணிகள் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்தவர் ஊதா நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்