வேட்டவலம்
வேட்டவலம் பேரூராட்சி அலுவலகத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா ஆய்வு செய்தார்.
அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தியிடம் பேரூராட்சிக்கான தேவைகள் மற்றும் குறைகள், தென்பெண்ணை ஆற்றின் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல் குறித்த வழிமுறைகளை பற்றி கேட்டறிந்தார்.
பின்னர் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோரிடம் அவரவர் வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்சினை பற்றி கேட்டறிந்தார்.
தொடர்ந்து கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சியில் நடைபெற்று வரும் சிமெண்டு சாலை பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது பேரூராட்சி தலைவர் கவுரி நடராஜன், துணைத் தலைவர் ஜெயலட்சுமி ரங்கன், வார்டு உறுப்பினர்கள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், இளநிலை உதவியாளர் பன்னீர்செல்வம், பேரூராட்சி பணியாளர்கள் வெங்கடேசன், மோகன், சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.