பந்தய காளைகள் திருட்டு

கம்பத்தில் பந்தய காளைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-03-17 11:42 GMT
கம்பம்:

கம்பம் கே.கே.பட்டி சாலைத்தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 42). இவர், புதிய பஸ்நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் 5 பந்தய காளைகளை பராமரித்து வருகிறார். கடந்த 15-ந்தேதி இரவு இவர், காளைகளுக்கு தீவனங்களை வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

 மறுநாள் காலை, தீவனங்கள் வைப்பதற்காக ரஞ்சித் அங்கு சென்றார். 
அப்போது 2 காளைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் காளைகள் கிடைக்கவில்லை. 

மர்மநபர்கள், காளைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ரஞ்சித் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்