சதுரகிரிக்கு சென்ற பக்தர் திடீர் சாவு
சதுரகிரிக்கு சென்ற பக்தர் திடீரென இறந்தார்.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்ய எண்ணற்ற பக்தர்கள் மலை ஏறி சென்றனர். இந்தநிலையில் சாமி தரிசனம் செய்து விட்டு மலையில் இருந்து ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 74) என்பவர் கீழே இறங்கி கொண்டு இருந்தார். அப்போது பச்சரிசி மேடு பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் அவரது உடலை மீட்டு தாணிப்பாறைக்கு கொண்டு வந்தனர்.பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சுப்பிரமணியத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.