நம்பியூர் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளர்கள் 2 பேர் சாவு

நம்பியூர் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளர்கள் 2 போ் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-03-16 21:19 GMT
நம்பியூர்
நம்பியூர் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளர்கள் 2 போ் பரிதாபமாக இறந்தனர்.
மது அருந்தினர்
நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் அலங்கியம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பன் (வயது 51). அதே பகுதியை சேர்ந்தவர் செல்லான் (46). நண்பர்களான இவர்கள் 2 பேரும் விவசாய கூலிவேலை செய்து வந்தனர். 2 பேருக்கும் மது குடிக்கும்  பழக்கம் உண்டு.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி அதே பகுதியில் உள்ள அண்ணமார் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது சுப்பனும், செல்லானும் சேர்ந்து கோவிலுக்கு அருகே அமர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
2 பேர் சாவு
இதனால் 2 பேருக்கும் தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்பனும், செல்லானும் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்