மொபட் ஓட்ட கற்றுத்தருவதாக கூறி 6-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மொபட் ஓட்ட கற்றுத்தருவதாக கூறி 6-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-03-16 20:50 GMT
ஈரோடு
மொபட் ஓட்ட கற்றுத்தருவதாக கூறி 6-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தனியாக இருந்த மாணவி
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் ராசு என்கிற சித்தராசு (வயது 41). தொழிலாளி. இவர் கடந்த 2018 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு மிகவும் பழக்கமான ஒருவரின் வீட்டின் அருகே சென்றார். அங்கு சிறுமி ஒருவர் தனியாக இருப்பதை பார்த்தார். அந்த சிறுமிக்கு வயது 11. அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 6-ம்வகுப்பு படித்து வந்தார். தந்தை இறந்து விட்டதால், தாயாருடன் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று உடல் நிலை சரியில்லை என்று பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. அப்போது சிறுமியின் தாயார் வீட்டில் இல்லை.
பாலியல் பலாத்காரம்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ராசு, சிறுமிக்கு மொபட் ஓட்ட கற்றுத்தருவதாக கூறி உள்ளார். அவர் ஏற்கனவே பழக்கமானவர் என்பதால் சிறுமியும் அவருடன் சென்றார். ஆனால் ராசு சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமி தாயாரிடம் கூறினார்.
அதைத்தொடர்ந்து அவர் மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராசுவை கைது செய்தனர்.
7 ஆண்டு ஜெயில்
மேலும் அவர் மீது ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து, நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ராசு என்கிற சித்தராசுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜர் ஆனார்.

மேலும் செய்திகள்