கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியின் மனைவி தற்கொலை
கொள்ளேகால் அருகே குடும்பத்தகராறில் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர், மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளேகால்:
பெண் தற்கொலை
பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகாவை சேர்ந்தவர்் வித்யாஸ்ரீ(வயது 26). பெலகாவியை சேர்ந்தவர் ஆனந்த் காம்ளே. இவருக்கும், பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டியை சேர்ந்த வித்யாஸ்ரீ(வயது 26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 9 மாத குழந்தை உள்ளது. ஜமகண்டியில் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றிய ஆனந்த் காம்ளே, கடந்த 2021-ம் ஆண்டு சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா ஹாங்கியா கிராமத்திற்கு வளர்ச்சி அதிகாரியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து தம்பதி கொள்ளேகால் தாலுகா பஸ்கீபூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வித்யாஸ்ரீ மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் தனியாக இருந்த வித்யாஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய ஆனந்த் காம்ளே மனைவி வித்யாஸ்ரீ தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கணவர், மாமனாரிடம் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த கொள்ளேகால் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட வித்யாஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வித்யாவின் தந்தை சித்தானந்த் மகள் தற்கொலைக்கு கணவர் ஆனந்த் காம்ளே, அவரது தந்தையான சியாமின் கொடுமையே காரணம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். அதன்பேரில் கொள்ளேகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரான கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ஆனந்த் காம்ளே, அவரது தந்தை சியாமிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.