அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-16 20:16 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி  ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமதிலகம், மாவட்ட பொருளாளர் இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஜ.டி.யு.மாவட்ட தலைவர் முத்துகுமரன், செயலாளர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  அங்கன்வாடி  ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த அங்கன்வாடி  ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்