குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருசாபிஷேகம்

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது.

Update: 2022-03-16 20:00 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவில்
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், தாமிரபரணி நதிகரையில் அமைந்து உள்ள குடவறை கோவிலாகும்.
இந்த கோவில் வருசாபிஷேகம் நேற்று காலையில் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு யாகசாலை பூஜையும், கும்பபூஜையும், காலை 9 மணிக்கு சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனையும் நடைபெற்றது.
9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கும்பங்கள் மேளதாளங்கள் முழங்க மூலஸ்தானத்திற்கும், விமானத்திற்கும் எடுத்து செல்லப்பட்டன.

வருசாபிஷேகம்
காலை 10 மணிக்கு மூலவருக்கும், விமானத்திற்கும் மேளதாளம் முழங்க வருசாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் கும்பத்தில் புனித நீரை ஊற்றினார்கள். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். இதைத்தொடர்ந்து மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வருதல் நடந்தது. 
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்