மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி

பாளையங்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் இறந்தார்.

Update: 2022-03-16 19:14 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழப்பாட்டம் பகுதியை சேர்ந்த பண்டாரம் மகன் மலையாண்டி (வயது 23). வி.எம்.சத்திரத்திரத்தை சேர்ந்த முத்துமாரி மகன் முத்துக்குமார் (18). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-வது ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூர் ரோட்டில் சமாதானபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் இவர்கள் மீது மோதியது. இதில் முத்துக்குமார், மலையாண்டி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். உடனே 2 பேரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்