தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

செஞ்சியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-16 19:04 GMT
செஞ்சி, 

செஞ்சி விழுப்புரம் சாலை நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமரன் (வயது 35). இவரது மனைவி செல்வி. செல்வகுமரனுக்கு  மதுகுடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் செல்வகுமரனிடம் இருந்து செல்வி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வகுமரன் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செல்வகுமரன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில்  செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்