கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம்

கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது

Update: 2022-03-16 18:50 GMT
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிறப்பு முகாம் 
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக  நாளை(வெள்ளிக்கிழமை) காரைக்குடி தாலுகாவில் பானான்வயல் கிராமத்திலும், தேவகோட்டை தாலுகாவில் அனுமந்தக்குடி கிராமத்திலும், திருப்பத்தூர் தாலுகாவில் எஸ்.வேலங்குடி கிராமத்திலும் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது. 
பயன்பெறலாம் 
அதே போல சிவகங்கை தாலுகாவில் சேந்தி உடையநாதபுரம் கிராமத்திலும், மானாமதுரை தாலுகாவில் கிளங்காட்டூர் குரூப், கீழமேல்குடி கிராமத்திலும், இளையான்குடி தாலுகாவில் கீழாயூர் கிராமத்திலும், காளையார்கோவில் தாலுகாவில் பால்குளம் கிராமத்திலும் நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் பெறலாம். 
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்