திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

செவ்வாய்க்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-16 18:36 GMT
திருப்பத்தூர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் வருகிற 22-ந் தேதி முதல் செவ்வாய்க்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீடு முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது. தேசிய அடையாள அட்டை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இத்தகவலை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்