இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டியில் கோடைகால தண்ணீர் பந்தல் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

மலைக்குடிப்பட்டியில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-03-16 18:32 GMT
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட கோத்திராப்பட்டி ஊராட்சி மலைக்குடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மலைக்குடிப்பட்டியில் பொதுமக்கள் மற்றும் வாகன பயணிகளின் தாகத்தை தணிக்கும் வகையில் அ.தி.மு.க. சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இங்கு மக்களுக்கு தாகம் தணிக்கும் வகையில் தண்ணீர், நீர் மோர், பானகம், லெமன் ஜூஸ், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவை மக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் கோடை கால தண்ணீர் பந்தல் படிப்படியாக மாவட்டம் முழுவதும் திறக்கப்படும் என விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

மேலும் செய்திகள்