வாடகைக்கு எடுத்த பொக்லைன் எந்திரத்தை திருப்பி தர மறுத்தவர் கைது
வாடகைக்கு எடுத்த பொக்லைன் எந்திரத்தை திருப்பி தர மறுத்தவர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி:
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் ஏசு ராஜன். முன்னாள் ராணுவ வீரரான இவர் தனது ஓய்வூதிய பணத்தில் பொக்லைன் எந்திரத்தை வாங்கி வாடகைக்கு கொடுத்து வந்தார். இவரிடம் தர்மபுரியை சேர்ந்த குமார் (வயது 51) என்பவர் மேட்டூரை சேர்ந்த சதீஷ் மூலமாக பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால் குறிப்பிட்டபடி வாடகை தராமல் இருந்து வந்துள்ளார். பொக்லைன் எந்திரத்தையும் திருப்பி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏசுராஜன் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.