சிங்காரப்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
சிங்காரப்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது.
சிங்காரப்பேட்டை:
சிங்காரப்பேட்டை அருகே கொட்டுகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் கடந்த 13-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 1 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.