கந்திகுப்பம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு லாரி டிரைவர் கைது

கந்திகுப்பம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-16 18:20 GMT
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் அருகே உள்ள ராசிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 32). லாரி டிரைவர். இவர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
======

மேலும் செய்திகள்