ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி முதியவர் சாவு

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார்.

Update: 2022-03-16 18:20 GMT
ஆவூர்:
குளத்தூர் தாலுகா, மாத்தூர் அருகே உள்ள வெண்ணமுத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 80). விவசாயியான இவர் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 12-ந் தேதி ஜல்லிக்கட்டு காளையை அவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவதற்காக ஓட்டி சென்றுள்ளார். அப்போது அந்த காளை எதிர்பாராதவிதமாக மணியின் இடதுபுற விலாவில் கொம்பால் முட்டி தள்ளியது. 
இதில் பலத்த காயமடைந்த மணியை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்