படைவீடு, பல்லக்காபாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

படைவீடு, பல்லக்காபாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2022-03-16 18:19 GMT
குமாரபாளையம்:
சங்ககிரி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரெயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல் பாளையம், சின்னாகவுண்டனூர், வெப்படை, சவுதாபுரம், பாதரை, அம்மன் கோவில், மக்கிரிபாளையம், முதலைமடையானூர், திருநகர் பை-பாஸ் சிட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
இதேபோல் பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்