அணிமூர் கிடங்கில் குப்பைகளை கொட்ட பேச்சுவார்த்தை
அணிமூர் கிடங்கில் குப்பைகளை கொட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு நகராட்சி அணிமூர் குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அணிமூரில் குப்பைகளை கொட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் நகராட்சி தலைவர் நளினி கலந்து கொண்டு, தூய்மை பாரத திட்டத்தின் கீழ் குப்பைகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான நிதி பெறப்பட்டவுடன் எந்திரம் மூலம் குப்பைகள் அழிக்கப்படும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார். அப்போது நகராட்சி பொறியாளர் சண்முகம், அணிமூர் ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வன், ஒன்றியக்குழு துணை தலைவர் ராஜவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.