மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1¼ லட்சம் திருட்டு

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1¼ லட்சம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-16 18:13 GMT
செஞ்சி, 
செஞ்சி அருகே உள்ள பரதன்தாங்கல் என்ற ஊரைச் சேர்ந்தவர் குருசாமி மகன் பழனி (வயது 42). இவர் நேற்று மதியம் ஆலம்பூண்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அங்கு அவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் அதனை வங்கி அருகில் நிறுத்தியிருந்த தன்னுடைய மோட்டார் சைக்கிள் கவரில் வைத்துவிட்டு, சட்டை பாக்கெட்டில் இருந்த சாவியை எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிள் சாவியும், சில்லரையும் கீழே சிதறி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து பழனி சாவி மற்றும் சில்லரையை எடுத்துவிட்டு, மோட்டார் சைக்கிள் கவரை பார்த்த போது அதில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. தான் கீழே குனிந்து சாவி மற்றும் சில்லரையை எடுத்த நேரத்தில் யாரோ மர்மநபர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்