காரைக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் அருகே கப்பகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 55). தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் தேவகோட்டை அருகே சடையன்காடு கிராமத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் ராஜா சடையன்காடு நான்கு ரோட்டில் உள்ள பேக்கரிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து தேவகோட்டை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக ராஜா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை தேடி வருகின்றனர்.