கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கப்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அன்புச்செழியன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரத்சந்திரன், சிறார் நலன் டாக்டர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரவிக்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர். 12 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டினர். பெற்றோரிடம் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு தான் முதலில் தடுப்பூசி செலுத்தி வருகிறோம். நேற்று மயிலாடுதுறை வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது என்று வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரத்சந்திரன் தெரிவித்துள்ளார்.