திருக்கோவிலூர் நகராட்சியில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்

திருக்கோவிலூர் நகராட்சியில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-03-16 17:38 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் நகராட்சியில் நிலுவையில் உள்ள வரி, நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் உள்ள வாடகை பாக்கி ஆகியவற்றை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சுமார் ரூ.60 லட்சம் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாடகை பாக்கி செலுத்ததால், நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடை வைத்து நடத்திவரும் 5 கடைகளை திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் கீதா தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

 இதையடுத்து கடைக்காரர்கள் ரூ.11 லட்சம் வாடகை பாக்கி செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது துப்புரவு ஆய்வாளர் ராஜா, இளநிலை உதவியாளர்கள் முனியப்பன், அண்ணாமலை, வருவாய் உதவியாளர் சரவணன், துப்புரவு மேற்பார்வையாளர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்