சாராயம் கடத்த முயன்ற வாலிபர் கைது

சாராயம் கடத்த முயன்ற வாலிபர் கைது

Update: 2022-03-16 17:11 GMT
நாகூர்;
நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீ்சாரை பார்த்தவுடன் மறைவாக நின்றார்.  இதனால் சந்தேகம் அடைந்த போலீ்சார் அருகில் சென்று பார்த்தபோது அவர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயபாண்டி மகன் பிரசாந்த் (வயது 23) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்