காலி பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும்

காலி பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள்-விற்பனை ஆலோசகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-03-16 16:55 GMT
மன்னார்குடி:
காலி பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள்-விற்பனை ஆலோசகர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
பொதுக்குழு கூட்டம் 
மன்னார்குடியில் நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை ஆலோசகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜசேகர் தலைமை தாங்கினார். முன்னதாக பொருளாளர் முத்துக்குமார் வரவேற்றார். இதில் செயலாளர் கோவிந்தராஜ் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். 
கூட்டத்தில் மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர சார்பதிவாளர் இல்லாத காரணத்தினால் பத்திரபதிவுகளில் தாமதம் ஏற்படுகிறது. 
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 
நிரந்தர சார்பதிவாளர் 
எனவே உடனடியாக நிரந்தர சார்பதிவாளரை நியமிக்க வேண்டும். 
காலியாக உள்ள பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நிர்வாகி பூமிநாதன் நன்றி கூறினார்
----

மேலும் செய்திகள்