தீயில் எரிந்த நிலையில் வாலிபர் பிணம்

வாய்மேடு அருகே தாணிக்கோட்டகத்தில் தீயில் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-16 16:33 GMT
வாய்மேடு;
வாய்மேடு அருகே தாணிக்கோட்டகத்தில் தீயில் எரிந்த நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார்  விசாரணை நடத்தி வருகிறார்கள். 
வீடு தீப்பற்றி எரிந்தது
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் ஜீவா நகர் பகுதியை் சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் சங்கர்(வயது32). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.  இவரது தாய் -தந்தை ஏற்கனவே இறந்துவிட்டனர். இவரது சித்தி அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். சங்கர் மட்டும் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை திடீரென
சங்கர் இருந்த வீடு தீப்பற்றி எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து தீயை அனைத்தனர். 
உடல் கருகிய நிலையில் பிணம்
இதற்குள் வீடு முழுவதும் எரிந்து விட்டது. மேலும் வீட்டுக்குள் இருந்த சங்கர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து தகவல் அறிந்த தாணிக்கோட்டகம் ஊராட்சி தலைவர் முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் வாய்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கர் தீக்குளித்து தற்கொலை செய்தாரா? அல்லது அவர் சாவுக்கு வேறு காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மேலும் செய்திகள்