1,266 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல்
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,266 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
சுல்தான்பேட்டை
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,266 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த மாதம் கொப்பரை கொள்முதல் தொடங்கியது. இங்கு அரவை கொப்பரை கிலோ ரூ.105,90-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இதுவரை 43 விவசாயிகளிடம் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட 1,266 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மொத்த மதிப்பு மொத்தம் ரூ.67 லட்சத்து 3 ஆயிரத்து 470 ஆகும். தொடர்ந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது.
உற்பத்தியாளர்கள் ஆர்வம்
காங்கேயம், வெள்ளக்கோவில் போன்ற வெளிமார்க்கெட்டை விட தற்போது அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் விலை அதிகமாக உள்ளதால் உற்பத்தியாளர்கள் தங்களது கொப்பரை தேங்காய்களை அருகில் உள்ள செஞ்சேரி, நெகமம் அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொப்பரை தேங்காய் விற்பனை செய்ய இதுவரை சுமார் 402 உற்பத்தியாளர்கள் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவைகளை கொண்டு செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்து உள்ளனர். அங்கு கொள்முதலுக்கான ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் இஷாக் செய்து வருகிறார்.