ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா 18 ந் தேதி தொடங்குகிறது

ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா 18 ந் தேதி தொடங்குகிறது

Update: 2022-03-16 15:24 GMT
ஊட்டி

ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா 18- ந் தேதி தொடங்குகிறது.

கோவில் திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக ஊட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். 

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதே போல் நடப்பாண்டில் 18 ந் தேதி  பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்குகிறது.  கணபதி ஹோமம், நவகலச பூஜை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து பூரதம் புறப்பாடுடன் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 20-ந் தேதி காப்பு கட்டுதல் நடக்கிறது. 

தேரோட்டம்

தொடர்ந்து 21-ந் தேதி முதல் ஏப்ரல் 18-ந் தேதி வரை தினமும் மாலை ஒவ்வொரு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதனை அமைப்பினர், உபயதாரர்கள், சமூகத்தார் சார்பில் நடத்தப்படுகிறது.

 முக்கியமாக ஆதிபராசக்தி, துர்க்கை, கொடுங்களூர் அம்மன், ராஜகாளியம்மன், ஹெத்தையம்மன், மகா மாரியம்மன் உள்பட பல்வேறு அலங்காரத்துடன் வாகனங்களில் எழுந்தருளிகிறார்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 19-ந் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், 8 மணிக்கு பட்டு பரிவட்டம் சாத்துப்படி, 8.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு சிறப்பு கனகாபிஷேகம் நடைபெறுகிறது. 

திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

வேல்முருகன் கோவில்

கூடலூர் தாலுகா தேவர்சோலை 8-ம் மைல் வேல்முருகன் கோவில் பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா 18 ந் தேதி  நடக்கிறது. இதை யொட்டி 9-வது மைல் ஆற்றங்கரையில் இருந்து பால்குடங்கள் பறவை காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக தேவர்சோலை சிவன் கோவிலுக்கு சென்று முக்கிய சாலை வழியாக மீண்டும் கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடக்கிறது. 

பின்னர் தேர் ஊர்வலமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்