திருச்செந்தூரில் 3 வழிப்பறி திருடர்கள் கைது

திருச்செந்தூரில் 3 வழிப்பறி திருடர்களை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-16 14:27 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகே சண்முகபுரம்- ராணிமகாராஜபுரம் சாலையில் சென்ற போது, அங்குள்ள காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முறப்பநாடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் அய்யப்பன் (வயது 21), வல்லநாடு சர்ச் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் தம்பன் (22) மற்றும் அடைக்கலாபுரம் சுனாமி நகரை சேர்ந்த செல்வம் மகன் சாரதி (20) என்பது தெரியவந்தது. அவர்கள் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அய்யப்பன், தம்பன் மற்றும் சாரதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அய்யப்பனுக்கு பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், தம்பனுக்கு செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், சாரதிக்கு நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்