கொள்ளன் குளத்தை தூர்வார வேண்டும்
ஓகைப்ேபரையூரில் துர்நாற்றம் வீசும் கொள்ளன் குளத்தை தூர்வார வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
ஓகைப்ேபரையூரில் துர்நாற்றம் வீசும் கொள்ளன் குளத்தை தூர்வார வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளன் குளம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக கொள்ளன் குளம் ஏற்படுத்தப்பட்டது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குளம் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது குளம் முழுவதும் குப்பைகள் மற்றும் செடி, கொடிகள் படர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது.
துர்நாற்றம்
இந்த குளத்திற்கு ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் வருவதற்கும், வெளியேற்றுவதற்கும் வாய்க்கால் வசதி இல்லாத அவல நிலை உள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மழை நேரத்தில் குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தேங்கி நிற்கும் மழை தண்ணீர் சில நாட்களில் மாசு படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.
தூர்வார வேண்டும்
இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர் கேடு விளைவிக்கும் வகையில் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படித்துறை இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால் குளத்தின் அளவு குறுகிய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துர்நாற்றம் வீசும் கொள்ளன் குளத்தை தூர்வார வேண்டும். மேலும் சேதமடைந்த படித்துறையை புதிதாக கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.