செங்கல்பட்டு அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
செங்கல்பட்டு அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அடுத்த பாலூர் ஊராட்சி, நந்தமேடு, வள்ளலார் தெருவை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகன் முருகன் (வயது 25). இவர் கண்டிகையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
மேலும் இவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமலும், சரியான வேலை கிடைக்காததாலும் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் முருகன் தனது வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்பில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.