‘பன்னீர் பட்டர் மசாலா’ வாங்கி தராததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பழைய பெருங்களத்தூர் அருகே ‘பன்னீர் பட்டர் மசாலா’ வாங்கி தராததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்,
பழைய பெருங்களத்தூர், பாரதி நகரை சேர்ந்தவர் கோவர்தன், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வசுந்தரா ரெயில்வே துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். வசுந்தரா தனது 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இளைய மகளான ஹினாகிராஸ் (வயது 18) என்பவர் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக ஹினாகிராஸ் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தனக்கு பன்னீர் பட்டர் மசாலா வேண்டும் என்று தனது தாயாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. உடல்நிலையை கருதி மகள் கேட்டதை வசுந்தரா வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரத்தில் இருந்த ஹினாகிராஸ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.