காதலித்த பெண்ணுக்கு திருமணம்: கேரளா வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதால், ஈரோட்டில் கேரளா வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-15 21:13 GMT
ஈரோடு
காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதால், ஈரோட்டில் கேரளா வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒருதலை காதல்
கேரளா மாநிலம் மலம்புர மாவட்டம் நடுவட்டம் பகுதியை சேர்ந்தவர் கபீர். இவருடைய மகன் சபான் பையாஸ் (வயது 21). 
இவர் ஈரோடு புது மஜித் வீதியில் தங்கி இருந்து, மணிக்கூண்டு பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். சபான் பையாஸ் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  இதை அறிந்த சபான் பையாஸ் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் மனவேதனை அடைந்தார். நேற்று முன்தினம் இரவு அறைக்குள் தூங்க சென்றார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து சபான் பையாஸ் வெளிவரவில்லை.
போலீஸ் விசாரணை
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து அறையை சேர்ந்தவர்கள் ஜன்னல் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சபான் பையாஸ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
உடனடியாக ஈரோடு டவுன் போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சபான் பையாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்