ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறிப்பு

ஆசிரியையிடம் 7 பவுன் நகை பறிப்பு

Update: 2022-03-15 20:53 GMT
மதுரை
மதுரை கண்ணனேந்தல் சந்தான நகரை சேர்ந்தவர் சுமதி (வயது 48), அரசு பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இவர் மொபட்டில் அய்யர்பங்களா வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்தார். அவர் திடீரென்று சுமதியை வண்டியில் இருந்து கீழே தள்ளி விட்டு அவரிடமிருந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டார். இதில் அவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்