12-14 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி; மந்திாி சுதாகர் இன்று தொடங்கி வைக்கிறார்

12-14 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மந்திரி சுதாகர் இன்று தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-03-15 20:27 GMT
பெங்களூரு:

கர்நாடகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. 

இந்த நிலையில் கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் 12-14 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க விழா இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவ கல்லூரியில் நடக்கிறது. 

இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைக்கிறார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் 2-வது டோஸ் போட்டு 9 மாதங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்