விறகு ஏற்றி வந்த டிராக்டர் டிரைவருக்கு அபராதம்
கடையம் அருகே உரிய அனுமதியின்றி விறகுகளை ஏற்றி வந்த டிராக்டர் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடையம்:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வனக்கோட்டம் கடையம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட ராமலிங்கபுரம் கிராமம் பகுதியில் கோவிந்தாபேரி பீட் வனக்காப்பாளர் பெனாசிர் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தார். அதில் உரிய அனுமதி சீட்டு இன்றி பல வகையான விறகுகளை ஏற்றி வந்தது கண்டுபிடிக்கபட்டது. இதுதொடர்பாக துணை இயக்குனரின் உத்தரவுப்படி டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.