தொழிலாளியை தாக்கிய அண்ணன்-தம்பி மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய அண்ணன்-தம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-15 19:57 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறையூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் மலர்கொடி(வயது 53). இவரது மகன் சரத்குமார். ெதாழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருமைராஜின் மகன்களான கண்ணன், சதீஷ் ஆகியோருக்கும் இடையே போன் பேசியது தொடர்பாக முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கண்ணன், சதீஷ் ஆகியோர் சேர்ந்து சரத்குமாரை அவதூறாக பேசி, திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மலர்கொடி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கண்ணன், சதீஷ் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்