சுடலை மாடசாமி கோவில் கொடை விழா
முக்கூடல் சுடலை மாடசாமி கோவில் கொடை விழா நடந்தது.
முக்கூடல்:
முக்கூடலில் சுடலை மாடசாமி கோவில் கொடை விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், பூந்தட்டு ஊர்வலம், குடி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தது. இரவில் சாமக்கொடை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முக்கூடல் பேரூராட்சி தலைவி ராதா, ஸ்ரீலங்கா காளிமுத்து, மதுரை நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் பொன்ராஜ் நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா பொறுப்பாளர்கள் காசிநாடார், லட்சுமி நாராயணன், கண்ணன், சரவணன் ஆகியோர் செய்துள்ளனர்.