ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் மையப்பகுதியில் சட்ருட்டி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முழுவதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன. இதனால் வாய்க்கால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும், வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ருட்டி வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-இருளப்பன், மன்னார்குடி.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா செருதூர் கிராமம் வடக்குத்தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், செருதூர்.