ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது
மணப்பாறை அருகே வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
மணப்பாறை, மார்ச்.16-
மணப்பாறை அருகே வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
ரெயிலில் அடிப்பட்டு
மணப்பாறையை அடுத்த திருச்சி சாலை ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். மேலும் அந்த வாலிபரின் உடல் அருகே ஒரு கடிதம் கிடந்தது. இதையடுத்து திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது இறந்தவர்மணப்பாறையைஅடுத்தசுண்டக்காம்பட்டியைச் சேர்ந்த கோபால் (வயது 23) என தெரியவந்தது.
மேலும் இறந்தவரின் அருகில் கிடந்த கடிதத்தில் என் பெயர் கோபால் என்றும், சுண்டக்காம்பட்டியைச் சேர்ந்த ஒரு நபரின் மனைவியின் பெயரை குறிப்பிட்டு அவரை 2018-ல் இருந்து தன்னுடைய அனுசரிப்பில் வைத்திருந்தேன். தற்போது அந்தப் பெண் தந்தையின் பேச்சை கேட்டு என்னை வெறுத்து ஒதுக்கி விட்டார். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். மனசாட்சி உள்ள நபர்கள், நண்பர்கள் என் குடும்பத்தை காப்பாற்றுமாறும், மனவலியுடனும், மனவருத்தத்துடனும் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஒரு செல்போன் எண்ணை குறிப்பிட்டு அதில் ரெக்கார்டு உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்கொலை
இதனால் கோபால் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.